எளிய கேட்ச்சை தோனி விட்டதை ஏன் யாரும் கேட்கவில்லை? முன்னாள் வீரரின் பேச்சு
CSK அணி வீரர்கள் தோனி கேட்ச்சை தவறவிட்டதை கண்டுகொள்ளவில்லை என மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்தார்.
கேட்ச்சை தவறவிட்ட தோனி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியில் KKR வீரர் ரசல் அடிக்க முயன்ற பந்து கேட்ச் ஆக தோனியிடம் சென்றது. ஆனால் அவர் அதனை பிடிக்க தவறினார்.
எனினும், அணித்தலைவர் உட்பட எந்த சக வீரரும் அதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் மற்றும் சைமன் டவுல் ஆகியோர் தோனி கேட்ச் விட்டது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மைக்கேல் வாகன், சைமன் டவுல் அதிருப்தி
அவர்கள் தங்கள் உரையாடலில் இதனை கூறினர். 'ஒரு எளிதான கேட்ச்சை தோனி தவறவிட்டார். அப்போது கமெரா CSK அணியின் வீரர்கள் மீது திருப்பப்பட்டது. ஏனெனில் கேட்ச்சை விட்டது தோனி என்பதால் அது பரவாயில்லை என்பதுபோல் அவர்கள் இருந்தனர்' என வாகன் கூறினார்.
அதற்கு டவுல், யாருமே ஒரு வார்த்தை கூட அதற்காக கூறவில்லை. அச்சமயத்தில் தோனி கேட்ச் தவறவிட்டதற்காக பந்துவீச்சாளர் கோபமான ரியாக்சன் கொடுத்திருந்தால் அதனை நான் விரும்பியிருப்பேன் என்றார்.
பின்னர் வாகன், பந்துவீச்சாளர் ரஹ்மான் கோபமடைய சென்றார், ஆனால் தோனி என்பதால் கடைசியில் அவர் அமைதியாக சென்றுவிட்டார் என்று குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |