சாலை விபத்தில் உயிரிழந்த இலங்கை பெண்: இருவரை கைது செய்த பொலிஸார்
இலங்கையில் பெண் உயிரிழப்புக்கு காரணமான இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
இலங்கையின் கனகராயன்குளம் பகுதியில் பெண் மீது வாகனத்தை மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும் மீட்டு இருப்பதாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 16ஆம் திகதி இரவு கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
அப்போது ஏ9 வீதியில் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 32 வயது ம.இதயரஞ்சினி என்றும் 4 குழந்தைகளுக்கு தாய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |