இலங்கையில் முதிரை குற்றிகளுடன் விபத்துக்குள்ளான வாகனம்: தப்பியோடிய சாரதி
இலங்கையின் வவுனியா, புதுக்குளம் பகுதிக்கு அருகே முதிரைக் குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று(26.09.2025) காலை அரங்கேறிய நிலையில் வாகனத்தை பொலிஸ் அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர்.
நிற்காமல் சென்ற வாகனம்
முதிரைக் குற்றிகளை ஏற்றிக் கொண்டு இரணை இலுப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த வாகனம் பொலிஸாரால் சோதனைக்கு இடை மறிக்கப்பட்டது.
ஆனால் பொலிஸாரின் உத்தரவுக்கு கட்டுபடாமல் நிற்காமல் சென்ற வாகனம் புதுக்குளத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வாகனத்தில் இருந்த 11 முதிரைக்குற்றிகளை கைப்பற்றியதோடு வாகனத்தையும் மீட்டெடுத்தனர்.
இந்த விபத்தை தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த சாரதி தப்பியோடிய நிலையில், ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |