தாயாரிடம் ரூ 10,000 கடன் வாங்கி உருவாக்கிய நிறுவனம்... தற்போது இவரது சொத்து மதிப்பு 3.5 பில்லியன் டொலர்
பாரம்பரிய உடைகளை அறிமுகம் செய்து, அதன் ஊடாக இந்திய மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற நிறுவனங்களில் ஒன்று Vedant Fashions.
பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர்
பாரம்பரிய உடைகளை அதிகமாக விரும்பும் பெரும்பாலான இந்திய மக்களுக்காக Manyavar, Mohey, Manthan, Mebaz, மற்றும் Twamev ஆகிய பிராண்டுகளையும் Vedant Fashions அறிமுகம் செய்துள்ளது.
மேலும், 2022ல் பொதுமக்களுக்கு என பங்குகளை வெளியிட்டு மேலதிக நிதியை திரட்டியுள்ளது, இதனால், Vedant Fashions நிறுவனத்தின் நிறுவனர் ரவி மோடி 2022ல் இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரானார்.
தனது 13 வயதில் தந்தையின் துணிக்கடையில் விற்பனையாளராக பணியாற்றத் தொடங்கியுள்ளார் ரவி மோடி. அங்கிருந்து பெற்ற அனுபவம், 2002ல் தமது மகன் பெயரில் Vedant Fashions என்ற நிறுவனத்தை உருவாக்க தூண்டியது.
ஆனால் தாயாரிடம் இருந்து ரூ 10,000 கடனாகப் பெற்று தான் முதல் முதலில் Vedant Fashions என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார் ரவி மோடி. பாரம்பரிய இந்திய ஆடைகளை உற்பத்தி செய்வதே தமது நிறுவனத்தின் இலக்கு எனவும் அவர் முடிவு செய்தார்.
இந்தியாவின் 248 நகரங்களில்
கொல்கத்தாவில் தொடங்கி, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கிளை பரப்பினார். தற்போது இந்தியாவின் 248 நகரங்களில் 662 கடைகளை திறந்துள்ளது Vedant Fashions. அத்துடன் சர்வதேச அளவில் 16 கடைகள் செயல்பட்டு வருகிறது.
தமது நிறுவனத்தின் வருவாய் ஆண்டு தோறும் அதிகரிக்க, பல ஆண்டு கனவான Mercedes கார் ஒன்றை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் ரவி மோடி.
ஆனால், Mercedes காருக்கு என செலவிடும் தொகையை ஏன் தமது நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக பயன்படுத்தக் கூடாது என்ற கேள்வி, அவரை Mercedes கார் வாங்கும் எண்ணத்தை கைவிட வைத்தது.
2022ல் உலகின் 1,238வது கோடீஸ்வரராக தெரிவான ரவி மோடியின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. மேலும் Vedant Fashions நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு இந்திய மதிப்பில் ரூ 33,274 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே ஆண்டில் ரூ.208 கோடியை அள்ளிக்கொடுத்த தென்னிந்தியர்... ஜனாதிபதி ஒபாமாவின் நம்பிக்கை பெற்றவர்: யாரிவர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |