Veechu Parotta: சுவையான வீச்சு பரோட்டா: எப்படி செய்வது?
பரோட்டா என்பது பிரபல ஹொட்டல்களில் மட்டுமல்லாமல், ரோட்டுக்கடைகளிலும் பிரபலமான ஒரு உணவு ஆகும்.
பரோட்டாவிற்கு சிக்கன், மட்டன், சால்னா என அனைத்திற்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
அந்தவகையில், சுவையான வீச்சு பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா- 2 கப்
- உப்பு- தேவையான அளவு
- சர்க்கரை- ½ ஸ்பூன்
- பால்- ¼ கப்
- தண்ணீர்- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, சர்க்கரை, பால் சேர்த்து கலந்து பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிணைந்துகொள்ளவும்.
பின் அதில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிணைந்துகொள்ளவும்.
அடுத்து அதன் மேல் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து 2 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து இந்த மாவை சிறிய சிறிய உருண்டயாக பிணைந்து எண்ணெய் சேர்த்து கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் உருண்டையை கைகளால் நன்கு சதுரவடிவில் மெலிதாக விரித்து பின் இதனை நான்கு பக்கமும் மடித்துக்கொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் தவவைத்து பரோட்டாவை சுட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான வீச்சு பரோட்டா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |