தினமும் 8 கோடி சமோசாக்கள் அமோக விற்பனை.., கோடிகளில் வருமானம் பார்க்கும் தம்பதியினர்
சமோசா விற்பனையில் வளர்ந்து கோடிகளில் வருமானம் பெரும் தம்பதியினரை பற்றி பார்க்கலாம்.
சமோசா சிங்
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள தானே பகுதியில் சமோசா சிங் என்ற உணவகம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் நிதி சிங் மற்றும் அவரது கணவர் எஸ்வி சிங். இவர்கள் இருவருமே விஞ்ஞானியாக பணியாற்றியுள்ளனர்.
இந்தியாவில் பாப்புலராக இருக்கும் ஸ்ட்ரீட் புட்டான சமோசாவை மதிப்பான பட்சணமாக மாற்ற வேண்டும் என்று நிதி சிங்கிற்கு எண்ணம் தோன்றியுள்ளது. இதனால், தங்களுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு உணவகம் ஒன்றினை தொடங்கியுள்ளனர்.
அங்கு, ஆரோக்கியமான சமோசாக்களை விற்பனை செய்து வந்தனர். வியாபாரம் வேகமாக வளர்ச்சி அடைந்தது. அவர்கள், சமோசாவுடன் தங்களது பெயரான சிங்கை இணைத்து சமோசா சிங் என்று பெயர் வைத்தனர்.
தினமும் 8 கோடி சமோசாக்கள்
கொரோனா காலத்தில் மக்கள் வெளியில் வரமுடியாத நேரங்களில், ஒன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் சமோசாக்களை டெலிவரி செய்து வந்தனர். இதனால், மக்களுக்கு பிடித்து ஆர்டர்கள் குவிந்தன.
தற்போது, மல்டி மில்லியன் கம்பெனியாக சமோசா சிங் நிறுவனம் உருவெடுத்துள்ளது. இதைப்பற்றி கணவன், மனைவி கூறுகையில், வானவில்லை ரசிக்க வேண்டுமென்றால் மழையில் நனையாவிட்டால் எப்படி என்று கூறியுள்ளனர்.
180 பேர் வேலை செய்யும் சமோசா சிங் நிறுவனத்தில் தினமும் 8 கோடி சமோசாக்கள் விற்பனையாகிறது. இந்நிலையில், சமோசா சிங் பிராண்டை பான் இந்தியா அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறுகின்றனர். மேலும், இவர்களின் வருமானம் கோடிகளில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |