சொந்த மகளுக்கே பிரச்சாரம் செய்ய மறுக்கும் வீரப்பன் மனைவி.., அவர் எந்த கட்சியில் உள்ளார் தெரியுமா?
மறைந்த வீரப்பனின் மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவரது மனைவி வேறு கட்சியில் உள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் பாஜகவில் இருந்து விலகிய வீரப்பனின் மகள் வித்யா ராணி கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், வீரப்பனின் மனைவி முத்து லட்சுமி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருப்பது தெரியவந்துள்ளது.
மகளுக்கு பிரச்சாரம் செய்ய மறுப்பு
இந்நிலையில் வீரப்பனின் மனைவி முத்து லட்சுமி பேசுகையில், "மக்களுக்காவும், தொகுதிக்காகவும் தர்மபுரியில் செயல்பட்டு வருகிறேன். மக்களுக்கு செய்ய வேண்டிய கோரிக்கையை தமிழக வாழ்வுரிமை கட்சி மூலம் போராடுவேன்.
என் மகள் முதலில் பாஜகவில் இருந்தார். இப்போது நாம் தமிழர் கட்சியில் இருக்கிறார். அது அவருடைய சிந்தனை, கொள்கை. சுயமாக முடிவெடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது. அவர் அந்த கட்சியில் இணைவதற்கு முன்பு என்னிடம் கூறவில்லை. எங்கிருந்தாலும் பத்திரமாக இருக்கும்படி கூறினேன்" என்றார்.
மேலும், உங்களுடைய மகளுக்காக பிரச்சாரம் செய்வீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "கட்சி என்பது வேறு, உறவு என்பது வேறு. நான் இப்போது வேறு கட்சியில் இருக்கிறேன்.
எங்களுடைய கட்சியின் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணியில் இருக்கிறார். அதனை மீறி என்னால் போக முடியாது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |