Veg Mayonnaise: சுவையான வெஜ் மயோனைஸ்.., வீட்டிலேயே செய்யலாம்
பர்கர், பீசா, சாண்ட்விச், சாலட் போன்றவற்றில் மயோனைஸை சுவைக்காக தவறாமல் பயன்படுத்துவோம்.
ஆனால் சிலர் வெஜ்டேரியன் என்பதால் முட்டையில் செய்த மயோனைஸை சாப்பிடமாட்டார்கள்.
அந்தவகையில், வீட்டிலேயே சுவையான வெஜ் மயோனைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால்- ½ லிட்டர்
- எலுமிச்சை சாறு- ½
- பூண்டு- 2 பல்
- மிளகு- 4
- உப்பு- 1 சிட்டிகை
- சர்க்கரை- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கொதித்ததும் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் பால் நன்கு திரிந்து வரும்.
பின் அதனை நன்கு ஆறவைத்து வடிகட்டி பன்னீரை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி வடிகட்டிய பன்னீர், பூண்டு, உப்பு, மிளகு, சர்க்கரை சேர்த்தது சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துகிள்ளவும்.
பின் இதனை மென்மையாக வரும்வரை மீண்டும் நன்றாக அரைத்து எடுத்தால் சுவையான வெஜ் மயோனைஸ் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |