குழந்தைகளுக்கு பிடித்த சுவையான Veg Sandwich.., 5 நிமிடத்தில் செய்யலாம்
இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பெரும்பாலும் துரித உணவுகள் போன்றவற்றின் மீது ஈர்ப்பு அதிகரித்துவிட்டன.
அந்தவகையில், குழந்தைகளுக்கு வீட்டிலேயே இந்த சுவையான வெஜ் சாண்ட்விச் செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி- 1 கப்
- புதினா- ¼ கப்
- பச்சைமிளகாய்- 3
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 4 பல்
- சீரகம்- 1 ஸ்பூன்
- வேர்க்கடலை- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எலுமிச்சை- ½
- வெல்லம்- 1 ஸ்பூன்
- வெங்காயம்- 1
- தக்காளி- 1
- வெள்ளரிக்காய்- 1
- கேரட்- 1
- முட்டைகோஸ்- 1 கப்
- மயோனீஸ்- ½ கப்
- பிரட்- 10
- வெண்ணை- 1 துண்டு
- மிளகு தூள்- 2 ஸ்பூன்
- சீரக தூள்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி, சீரகம், வேர்க்கடலை, உப்பு, எலுமிச்சை சாறு, வெல்லம் சேர்த்து தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், முட்டைகோஸ், வெள்ளரிக்காய், உப்பு மற்றும் மயோனீஸ் சேர்த்து கலந்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து பிரட் எடுத்து அதன் மீது வெண்ணெய் தடவி அரைத்த பச்சை சட்னியை தடவி அதன் மேல் கலந்து வைத்து கலவையை வைத்து சிறிதளவு மிளகு தூள், சீரக தூள் தூவி இன்னொரு பிரட் வைத்துமூடவும்.
இறுதியாக தவாவில் வெண்ணெய் சேர்த்து சூடானதும் செய்துவைத்த சாண்ட்விச்சை தவாவில் இருபக்கமும் சுட்டு எடுத்தால் சுவையான வெஜ் சாண்ட்விச் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |