நாவூறும் சுவையில் வெஜ் கட்லெட்.., எப்படி செய்வது?
Vegetable Cutlet In Tamil- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த வெஜ் கட்லெட்டை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் வெஜ் கட்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு - 5
- பச்சை பட்டாணி - 1 கப்
- கேரட் - 1
- குடைமிளகாய் - 1
- காலிஃபிளவர் - 1 கப்
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி - 1 துண்டு
- கொத்தமல்லி- சிறிதளவு
- எலுமிச்சை- 1
- மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - ½ ஸ்பூன்
- சீரக தூள் - ½ ஸ்பூன்
- முந்திரி பருப்பு- 5
- பிரட் தூள்- 1 கப்
- சோள மாவு - 1 ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த பச்சை பட்டாணி, வேகவைத்த காலிஃபிளவர், துருவிய கேரட், நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
பின் இதனுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரக தூள், முந்திரி பருப்பு, பிரட் தூள் சேர்த்து கலக்கவும்.

அடுத்து சிறிதளவு இந்த மாவை கலவையை எடுத்து வடை போல் தட்டி வைக்கவும்.
பின்னர் சிறிய கிண்ணத்தில், சோள மாவு மற்றும் தண்ணீர் ஊற்றி, கட்டி இன்றி கரைத்து தட்டிய மாவை சோள மாவு கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டவும்.
இறுதியாக வாணலில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி கட்லெட்டை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான வெஜ் கட்லெட் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |