காய்கறிகளை சாப்பிட்டுவிட்டு அதன் தோல்களை குப்பையில் இனி வீசாதீங்க! அதன் அற்புத நன்மைகள் என்ன தெரியுமா?
காய்கறிகளில் பல்வேறு சத்துக்கள் உள்ளது என்பதை நாம் அறிவோம், ஆனால் அதன் தோல்களை குப்பையில் அப்படியே போட்டு விடுவோம்.
ஆனால், இவற்றில் எண்ணற்ற நன்மைகள் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பது தெரியுமா?
காய்கறி தோல்களில் உள்ள சத்துக்கள் மற்றும் அதை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து காண்போம்.
பீட்ரூட் தோல்
இரத்தத்திற்கு நல்ல நண்பனாக பீட்ரூட் உள்ளது. இதன் தோலை சீவிய பிறகு அதனை தாடை மற்றும் உதடுகளில் தடவினால், மிகவும் அழகாக மாறும். அத்துடன் பார்ப்பதற்கு மென்மையாகவும் இருக்கும்.
தக்காளி தோல்
மிகவும் மென்மையான பழமான தக்காளியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவற்றை அப்படியே உண்டால் அது உடலுக்கு நன்மை தரும். இந்த தக்காளியின் தோலில் எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருக்கின்றன. இதனை முகத்தில் தடவினால் முகம் இளமையாக இருக்கும். அத்துடன், முகம் மின்னவும் செய்யும்.
பாகற்காய் தோல்
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் எவ்வளவு பயன்படும் என்பது நம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒன்றுதான். பாகற்காய் தோலில் ஒரு அற்புத மகத்துவம் உள்ளது. இதனை புண் தழும்புகள் மீது தடவினால் விரைவில் குணமாகும். அத்துடன் அவற்றில் உள்ள கிருமிகளையும் அழிக்கும்.
எலுமிச்சை தோல்
எலுமிச்சை தோலை நாம் குப்பையில் போடுவது வழக்கம். ஆனால், சரும பிரச்சினைகளை சரி செய்யும் பண்பு இதற்கு உண்டு. வறண்ட அல்லது எண்ணெய் பசை சருமத்தை கொண்டவருக்கு இதன் தோல் நன்கு உதவும். அத்துடன் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகள் இன்றியும் மாறும்.
உருளை கிழங்கு
உருளை கிழங்கு சாப்பிடுவது பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். ஆனால், நாம் இதன் தோலை பெரிதும் நீக்கி விடுவோம். இந்த தோலை கொண்டு உங்கள் முக அழகை எளிதாக பெறலாம். இதன் தோலில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை முகத்தில் ஒட்டினால் முகம் பொலிவு பெறும்.