30 வயதிற்குள் மூட்டு வலியா? உணவில் இந்த மாற்றம் அவசியம்
இந்தியாவை பொறுத்தவரை பலரும் வைட்டமின்கள், கால்சியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர்.
மூட்டு வலி
இது மூட்டு வலிக்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும். நாள் முழுக்க அமர்ந்தே இருக்கும்போது, இடுப்பு மற்றும் தொடைப்பகுதி தசைகள் வலிமை இழக்கும். இவைதான் மூட்டுகளுக்கு பலம் கொடுப்பவை. திடீரென இவற்றுக்கு வேலை கொடுத்தால், அப்போது மூட்டு வலி ஏற்பட்டுவிடும்.

இன்றைய காலகட்டத்தில் 30 வயதை தொடும்போதே பலரும் மூட்டுப் பிரச்சனைகள், அசௌகரியங்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனை சரிசெய்ய வைட்டமின் டி மற்றும் கால்சியம் அதிகமான உணவுகளான முட்டை, பால் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த ஆரஞ்சு, கேரட் போன்றவற்றை உட்கொள்ளலாம். உடல் எடை குறைப்பது, அன்றாடம் உடற்பயிற்சி போன்றவை மூலம் நம்மால் மூட்டுப் பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும்.
என்ன சாப்பிடலாம்?
கொழுப்பு நிறைந்த மீன்கள், ஆளி விதைகள், வால்நட் மற்றும் சியா விதைகளில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தை குறைத்து, மூட்டு வலியை போக்கி, அதில் ஏற்படும் இறுக்கத்தை குறைக்கிறது. கீரை வகைகள் மற்றும் சூரிய வெளிச்சம் மூலமாக கிடைக்கும்.

வைட்டமின் டி, கால்சியம் ஆகியவை எலும்புகளை வலுப்படுத்தி, ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதை தடுக்கிறது. இதனால் மூட்டுகள்மீதான அழுத்தம் குறைகிறது. மஞ்சள், இஞ்சி, கிரீன் டீ ஆகியவற்றில் வீக்க எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது.
மேலும், தீவிரமான மூட்டுப் பிரச்சனைகள், அதீத ஆஸ்டியோ-ஆர்த்ரிட்டீஸ், ஓய்வு நேரத்திலும் தீவிர மூட்டுவலி, அன்றாடம் நடக்கவே சிரமப்படுதல் போன்ற நேரத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.