சைவ உணவுகள் சாப்பிட்டும் Body Building! என்னென்ன உணவுகள் என்று தெரியுமா?
பொதுவாக ஆண்கள் அனைவரும் தனது உடலை பிட்டாக வைத்துக்கொள்ள பாடி ஃபில்டிங் செய்வது வழக்கம்.
அதற்காக அசைவ உணவுகள் சாப்பிட்டால் தான் தசை வளர்ச்சி மேம்படும் என்ற கருத்து உண்டு. ஆனால் சில வகை வெஜிடேரியன் உணவுகள் சாப்பிட்டும் கூட பாடி ஃபில்டிங் செய்ய முடியும்.
அப்படி பாடி ஃபில்டிங் செய்ய உதவும் வெஜிடேரியன் உணவுகள் பற்றி பார்ப்போம்.
உடலின் தசை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு கார்போ ஹைட்ரேட் புரதச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் அவசியம்.
கொண்டக்கடலை
தசை வளர்ச்சியை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் வைத்துக்கொள்ள கொண்டைக்கடலை முக்கிய பங்காற்றுகிறது.
கொண்டைக்கடலையில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்துக்கள் தசை வளர்ச்சியை மேம்படுத்துவதோடு தேவையற்ற கலோரிகளையும் கொழுப்பையும் குறைக்க உதவி செய்கிறது.
கொண்டக்கடலை சாப்பிட்டு வயிறு ஒரு நிறைவு கொடுப்பதால் நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி அதிக கலோரிகள் எடுப்பதைக் கட்டுப்படுத்துகிறது.
பயிறு வகைகள்
பயறு மற்றும் பருப்பு வகைகள் மிகச்சிறந்த புரத மூலங்களாகும். அதோடு தசை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கும் கார்போ ஹைட்ரேட்டுகளும் இதில் மிக அதிகம்.
அதனால் பாடி ஃபில்டிங் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய தினசரி உணவில் கட்டாயம் ஏதேனும் ஒரு பயறு மற்றும் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
பன்னீர்
மிக அதிக அளவு புரதங்களும் கால்சியமும் ஒரு வெஜிடேரியன் உணவு என்றால் அது பன்னீரை சொல்லலாம்.
இதுல் அதிகப்படியான அளவு புரதங்கள் இருக்கின்றன. குறிப்பாக சிக்கனுக்கு இணையான அளவு புரதம் இதில் உண்டு. அதனால் தசை வளர்ச்சியை மேம்படுத்தவும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும் இது உதவுகிறது.
கினோவா
கினோவாவில் போதிய அளவு புரதத்துடன் இரும்புச் சத்து, மக்னீசியம், வைட்டமின் பி6 ஆகியவையும் நிறைந்திருக்கின்றன.
greenDNA
அதனால் அரிசி உணவுக்கு மாற்றாக இதை சாப்பிடலாம்.
யோகர்ட்
யோகர்ட்டை தினமும் காலை நேரத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் அதிலுள்ள ப்ரோ - பயோடிக் பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு தசை வளர்ச்சியை அதிகரிக்கவும் ஏற்கனவே இழந்த தசையிழப்புகளை மீட்கவும் யோகர்ட் உதவுகிறது.
சோயா பொருள்கள்
சோயாவில் அதிகளவு புரதங்கள் இருப்பதால் தசையின் வளர்ச்சியை மேம்படுத்தவும் தசைகளை வலிமையாக்கவும் சோயா பால், சோயா பயறு, டோஃபு ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பது நல்ல பலன் தரும்.
நட்ஸ் வகைகள்
பாதாம், வால்நட், வேர்க்கடலை உள்ளிட்ட எல்லா வகையான நட்ஸ் வகைகளிலும் புரதங்கள் அதிகமாக இருக்கின்றன.
அதோடு பாதாம், வால்நட்டில் உடலுக்குத் தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கின்றன. அதனால் தினமும் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ்களை எடுத்துக் கொள்வது தசையின் வலிமையையும் வளர்ச்சியையும் மேம்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |