கடனாவில் நடந்த சமூக பேரணியில் நுழைந்த வாகனம்: 2 பேர் உயிரிழப்பு
கனடாவில் வாகனம் மோதிய விபத்தில் இரண்டு பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் “உண்மை மற்றும் நல்லிணக்க தேசிய நாள்” நிகழ்வை கொண்டாடுவதற்கான நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது பொதுமக்கள் கூடியிருந்த பகுதிக்குள் நுழைந்த வாகனம் ஒன்று நடைபாதை பயணிகள் மீது மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் இரண்டு பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவமானது உள்ளூர் நேரப்படி காலை 10.25 மணி அளவில் வான்கூவருக்கு தெற்கே உள்ள ட்சாவாசென் ஃபர்ஸ்ட் நேஷன்(Tsawwassen First Nation) பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த இருவரும் அந்த பழங்குடியின் மூத்த குடிமக்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இந்த சம்பவத்திற்கு முன்னதாக வாகனத்தை ஓட்டிய ஓட்டுநருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கலாம் என்று டெல்டா காவல்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்துக்கும், தேசிய நாளுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.