இளவரசி டயானாவைப்போலவே இளவரசர் ஹரியைத் துரத்திய வாகனங்கள்: பொலிசார் தெரிவித்துள்ள தகவல்
இளவரசி டயானாவின் மரணத்துக்கு வழிவகுத்த விபத்தைப் போன்றதொரு சூழலை அவரது மகனான ஹரி எதிர்கொண்ட நிலையில், அது தொடர்பில் பொலிசார் நீதிமன்றத்தில் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்கள்.
இளவரசி டயானாவின் துயர முடிவு
ராஜ குடும்பத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இளவரசர் சார்லஸ் டயானா பிரிவைத் தொடர்ந்து, விபத்தொன்றில் டயானா உயிரிழந்த விடயம் பிரித்தானியாவை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இளவரசர் சார்லஸ் மனதில் இடம் பிடிக்கத் தவறினாலும், உலக மக்கள் ஏராளமானோர் மனதில் இடம் பிடித்திருந்தார் டயானா.
பாரீஸில் தனது புதிய காதலரான டோடி என்பவருடன் காரில் சென்றுகொண்டிருந்த டயானாவை, பாப்பராஸிகள் எனப்படும் புகைப்படக்காரர்கள் துரத்த, அவரது கார் விபத்துக்குள்ளாக, டயானாவும் அவரது காதலரும் பரிதாபமாக பலியானார்கள்.
டயானாவைப்போலவே ஹரியைத் துரத்திய வாகனங்கள்
இந்நிலையில், கடந்த ஆண்டு, அதாவது 2023ஆம் ஆண்டு, மே மாதம் 16ஆம் திகதி, அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள மான்ஹாட்டன் என்னுமிடத்தில், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஹரி மேகன் தம்பதி பயணித்த காரையும் பாப்பராஸி புகைப்படக்காரர்கள் துரத்தியுள்ளார்கள். கார்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் சைக்கிள்களில் கூட ஹரி, மேகனை அந்த அந்த புகைப்படக்காரர்கள் துரத்த, பல மணி நேரம் இந்த துரத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Image: GC Images
நியூயார்க் மேயரான Eric Adams அந்த புகைப்படக்கார்களை கடுமையாக கண்டித்ததுடன், தன் தாயாகிய இளவரசி டயானாவின் உயிரைப் பறித்த விபத்தைப்போன்றதொரு விபத்தில் இளவரசர் ஹரியும் சிக்கியிருப்பாரானால், அது அவருக்கு பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடயமாக அமைந்திருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
Image: Getty Images
தற்போது, இளவரசர் ஹரிக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான ஒரு வழக்கு நடைபெற்றுவரும் நிலையில், இந்த சம்பவத்தை நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார்.
மேலும், அந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்படலாம் என்றும் பொலிசார் நேற்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Image: PA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |