வேளாங்கண்ணி உத்திரியமாதா திருவிழா ஆரம்பம்
தமிழகத்தில் நாகை வேளாங்கண்ணியில் அமைந்திருக்கும் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டு திருவிழாவுக்கான முதற்கட்ட நிகழ்வாக கொடியேற்றம் ஆரம்பிக்கபட்டுள்ளது.
வேளாங்கண்ணி உத்திரியமாதா
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் உத்திரிய மாதாவை பார்க்க வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இது முக்கியமாக ஒரு ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்குகின்றது. கீழதேய நாடுகளில் இந்த தலத்தை 'லூர்து நகர்' என்றும் அழைக்கின்றனர்.
இந்த தலம் தான் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் 'பசிலிக்கா' என்ற சிறப்பை பெற்றுள்ளது எனலாம்.
அந்தவகையில் ஆலயத்தில் தனியாக அமைந்திருக்கும் உத்திரிய மாதாவிற்கு ஆண்டு திருவிழா வருடதோறும் மும்பை வசாய் பகுதி மீனவர்கள் சார்பாக நடைபெற்று வருகின்றது.
ஆண்டு திருவிழா
வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து புறப்பட்ட பவனி கடற்கரை சாலை, ஆரியநாட்டுசாலை வழியாக ஆலயத்தை அடைந்ததை அடுத்து இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது.
பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் கொடி ஏற்றபட்டது.
மேலும் இந்த திருவிழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி வருகின்ற 15ம் திகதி வெகுவிமர்சையாக நடைபெற இருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |