தித்திக்கும் சுவையில் வெல்லம் தோசை.., இலகுவாக செய்வது எப்படி?
குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் தோசைகளைத் தவிர்த்து இந்த வெல்லம் தோசை செய்துப் கொடுத்தால் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் வெல்லம் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு - 2 கப்
- அரிசி மாவு- 1 கப்
- வெல்லம் - 3 கப்
- நெய் - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - சிறிதளவு
- ஏலக்காய் தூள் - ¼ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து இதனுடன் தேங்காய் துருவல், வெல்லப்பாகு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து தோசை சுடும் பதத்திற்கு கரைந்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக தோசைக் கல்லை சூடாக்கி மாவை ஊற்றி நெய் சேர்த்து இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான வெல்லம் தோசை ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |