வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய சிறிய விமானம்: ஒருவர் பலி
Velocity-173 fg plane crashed in georgia woods: அமெரிக்காவின் ஜார்ஜியா வனப்பகுதியில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் பலியானார்.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் Lawrenceville-யின் வனப்பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
சிறிய ரக விமானம்
ஜார்ஜியாவில் Lawrenceville-யின் வனப்பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று, கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானதாக க்வின்நெட் கவுண்டி வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், 911 கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளித்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படை வீரர்கள், வெலாசிட்டி-173 FG ரக விமானத்தை அடையாளம் கண்டனர்.
மேலும், விமானத்திற்குள் இரண்டு ஆண்கள் சிக்கியிருப்பதைக் கண்டனர். அவர்களில் எரிக் ஸ்டீபன்ஸ் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
பீட்டர் மேக்னூசன் என்று அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபர், தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
தொழில்நுட்பக் கோளாறு
முதற்கட்ட விசாரணையில், விமானம் எஞ்சினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு அருகிலுள்ள மரங்களில் விழுந்து நொறுங்கியதாகவும் தெரியவந்தது.
விபத்திற்குள்ளாவதற்கு முன்பு விமானம் சுமார் 90 நிமிடங்கள் வானில் பறந்துகொண்டிருந்தது என்று Fox 5 Atlanta செய்தி நிறுவனம் கூறியது.
இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் விமானி அவசரகால தரையிறக்கத்திற்கு முயற்சித்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இயந்திரக் கோளாறு என்ன என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.