பறந்த சிக்ஸர்கள்! மகளிர் டி20 தொடரில் மிரட்டிய வீராங்கனைகள்
மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான டிரைல்பிளேஸர்ஸ் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வேலோசிட்டி அணியை வீழ்த்தியது.
புனேவில் நேற்று நடந்த போட்டியில் டிரைல்பிளேஸர்ஸ்-வேலோசிட்டி அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வேலோசிட்டி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய டிரைல்பிளேஸர்ஸ் அணியில் கேப்டன் மந்தனா ஒரு ரன்னில் அவுட் ஆனார்.
ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிகஸ், தொடக்க வீராங்கனை மேகனாவுடன் சேர்ந்து அதிரடியில் மிரட்டினார். மேகனா 47 பந்துகளில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், ரோட்ரிகஸ் 44 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களும் விளாசினர். இதன் மூலம் டிரைல்பிளேஸர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் எடுத்தது. வேலோசிட்டி அணி தரப்பில் சிம்ரன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Photo Credit: BCCI
பின்னர் களமிறங்கிய வேலோசிட்டி அணியில் ஷபாலி வெர்மா (29), யஸ்டிகா பாட்டியா(19) நல்ல தொடக்க அமைத்தனர். ஆனால் அதன் பின்னர் வந்த வந்த வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
Photo Credit: IPL Twitter
எனினும் கிரண் நவ்கிர் சிக்ஸர்களை பறக்க விட்டார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் அதிரடியில் மிரட்டிய கிரண் 34 பந்துகளில் 69 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.
கிரண் ஆட்டமிழந்த பிறகு அடுத்தடுத்து வேலோசிட்டி அணி விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், டிரைல்பிளேஸர்ஸ் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டிரைல்பிளேஸர்ஸ் அணி தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Photo Credit: IPL Twitter