வெண்டைக்காய் துவையல் செய்வது எப்படி?
வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.
அதுமட்டுமல்லாமல் இரத்த சோகை, மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களை தீர்க்கும் சிறந்த மருந்தாகவும் வெண்டைக்காய் உள்ளது.
அப்படிப்பட்ட மருத்துவக்குணமிக்க வெண்டைக்காயில் பொரியல், குழம்பு என எப்பொழுதும் போல் செய்து சாப்பிடுவதை விட வெண்டைக்காயில் துவையல் செய்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.
இந்த வெண்டைக்காய் துவையலை சுடும் சாதத்தில் பிணைந்து சாப்பிடுவதற்கும் , தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் அருமையான காமினேஷனாக இருக்கும். இவ்வளவு அருமையான வெண்டைக்காய் துவையலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய்
நிலக்கடலை
பூண்டு
எண்ணெய்
வெந்தயம்
கடுகு
சீரகம்
மல்லி
வத்தல்
கறிவேப்பிலை
செய்முறை
ஒரு கடாயில் பச்சை வேர்க்கடலையை நன்றாக வறுத்த பின்பு அதில் பூண்டு பற்களை சேர்க்க வேண்டும்.
பின் ஒரு தட்டில் கொட்டி அதை நன்றாக ஆற வைக்க வேண்டும். பின் அதே கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் கால் டீ ஸ்பூன் வெந்தயம், கால் டீ ஸ்பூன் கடுகு, ஒரு டீ ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக பொறிக்க வேண்டும்.
பின் ஒரு டீ ஸ்பூன் மல்லி விதைகளை சேர்த்து நன்றாக சிவந்து வரும் வரை வறுக்க வேண்டும்.
மல்லி நன்றாக வறுத்த பின் அதில் காரத்திற்கு தேவையான அளவு காய்ந்த மிளகாயை சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் மூன்று கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்றாக ஆறவைக்க வேண்டும்.
பின் அதே கடாயில் வெண்டைக்காயை இரண்டு டீ ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து வதக்க வேண்டும்.
வெண்டைக்காய் வதங்கும் போது ஒரு தக்காளி, சின்ன லெமன் அளவிலான புளியை சேர்த்துக் நன்றாக வதங்கிய பின் அதை ஆற விட வேண்டும்.
இதையடுத்து மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலையை கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும். பின் அதே மிஸ்யில் வறுத்த கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் , சீரகம், மல்லி இவற்றை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக வதக்கி வைத்த வெண்டைக்காய் தக்காளி, புளியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.பின் அரைத்து வைத்திருந்த வேர்க்கடலை பொடியை அதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு ,ஒரு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் போட்டு தாளித்து கொட்டினால் சுவையான வெண்டைக்காய் துவையல் ரெடி.
இந்த வெண்டைக்காய் துவையல் தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு அருமையானதாக இருக்கும்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |