உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி அளிக்கும் வெந்தய களி: எப்படி செய்வது?
வெந்தய களி உடல் சூட்டை தனித்து உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். மழை காலங்களிலும் இந்த வெந்தய களியை எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் இது உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கவும், எலும்புகள் நன்கு வளரச் செய்யவும் உதவும்.
இந்த ஆரோக்கியமான சுவை நிறைந்த வெந்தய களி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி- 1 டம்ளர்
- உளுந்து-1/4 டம்ளர்
- வெந்தயம்- 1/4 டம்ளர்
- நல்லெண்ணெய்- 1/2 டம்ளர்
- உப்பு- 1/2 டீஸ்பூன்
- பனை வெல்லம்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் அரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக 7 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் உளுந்து மற்றும் வெந்தயத்தை சேர்த்துசிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பஞ்சி போல் ஆட்டி எடுத்துக்கொள்ளவும். அடுத்து அரிசியை சேர்த்து தனியாக ஆட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு அடிகனமான பாத்திரத்தில் 1/4 டம்ளர் நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து வைத்த அரிசி,உளுந்து மற்றும் வெந்தய மாவு, அதனுடன் சிறிதளவு உப்பு அதில் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
அது நன்கு வெந்து களி பதம் வரும்வரை அவ்வப்போது சுடுதண்ணீர் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
களி தயாரானது என்பதை அறிய தண்ணீரில் கையை நனைத்து உருண்டை பிடிகள் நன்கு ஒட்டாமல் வரும். இந்த பதம் வந்தவுடன் அதை 5 நிமிடம் மூடி பூட்டு வைக்கவும்.
இதை ஒரு தட்டில் எடுத்து வைத்ததில் அதில் பனை வெல்லத்தை நல்லெண்ணெய் சேர்த்து கரைத்து தொட்டு சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |