பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் மரணம்! அன்னையர் தினத்தில் உயிரிழந்த சோகம்
பிரபல இயக்குனரான வெங்கட்பிரபுவின் தாயரான மணிமேகலை நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசை கடவுள் என போற்றப்படும் இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இவர் ஒரு இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் வலம் வந்துள்ளார்.
இவரது மகன்கள் வெங்கட் பிரபு, நடிகர் மற்றும் வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். அதே போன்று இவரது இளையமகன் பிரேம் ஜி அமரனும், இசையமைப்பாளர் நடிகர் என, தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.
இந்நிலையில், கங்கை அமரனின் மனைவி மணிமேகலை( வயது 69) . உடல்நல பிரச்சனை காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11 :30 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
My heartfelt condolences to @vp_offl @Premgiamaren for the passing away of their mother who was a kind hearted and very special person to everyone around her ?.
— Ramya Subramanian (@actorramya) May 10, 2021
I am praying for the family to face the days ahead and for aunty’s soul to rest in peace ??. pic.twitter.com/vttRWKSuQ8