யார் இந்த வெங்கடேஷ் பட்...! இவ்வளவு சொத்துக்கு அதிபதியானது எப்படி?
பொதுவாகவே சமையல் என்றாலே பெண்கள் என்று தான் கூறுவார்கள். ஆனால் அதற்கு மாறாக கலமிறங்கியவர் தான் பிரபல சமையல்காரர் வெங்கடேஷ் பட்.
யார் இந்த வெங்கடேஷ் பட்?
வெங்கடேஷ் பட் ஒரு புகழ்பெற்ற இந்திய சமையல்காரர் ஆவார். இவர் Asan Memorial இல் கேட்டரிங் படித்தார் மற்றும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
பின்னர், சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் (General Management) படித்து முதுகலைப் பட்டம் பெற்றார்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான சமையல்காரர் மற்றும் ஏராளமான தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி மிகவும் பிரபலமடைந்தார்.
1994 ஆம் ஆண்டில் Hotel Chola Sheraton - இல் பணிபுரிய ஆரம்பித்து தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு Taj Coromandel இல் சமையலறை மேலாண்மை பிரிவில் மேலாண்மைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1998 ஆம் ஆண்டு Sous chef என்ற உயர் பதவியை பெற்றார்.
2007 ஆம் ஆண்டில் வேலையை விட்டு விலகி, அவர் பல்வேறு பிராண்டுகள் மற்றும் உணவகங்களை ஆரம்பித்து சொந்த தொழிலை செய்ய ஆரம்பித்தார்.
பின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகவும் பிரபலமானார் எனலாம்.
இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.
சொத்து மதிப்பு
மாத வருமானம், யூடியூப் பக்கம் என சம்பாதிக்கும் வெங்கடேஷ் பட் சொத்து மதிப்பு கோடிக் கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் இவர் தனக்கென ஒரு தொழிற்சாலை ஆரம்பித்து அதில் சமையல் பாத்திரங்களை செய்து வருகிறார்.
இவருடைய நிகர மதிப்பு சுமார் 1 மில்லியன் டொலர்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |