அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போடும் இந்திய வீரர்கள் - வைரலாகும் வீடியோ
பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடலுக்கு இந்திய வீரர்கள் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வரும் மார்ச் 26 ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்த பயிற்சி உட்பட வீரர்களுக்கிடையேயான வீடியோக்களை அந்தந்த அணி நிர்வாகம் தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இதனிடையே நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள அரபிக்குத்து பாடலுக்கு இந்திய இளம் வீரர் வெங்கடேஷ் ஐயருடன், ஆவேஷ் கான் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மாஸ்டர் திரைப்படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கும், பல கிரிக்கெட் வீரர்கள் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அரபிக்குத்து பாடல் அனைவரது ஆல்டைம் பேவரைட்டாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.