கோலி டி20 கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்த சில நிமிடங்களிலே முன்னாள் இந்திய விரர் போட்ட பதிவு! என்ன சொல்லியிருக்கார் பாருங்க
இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்த நிலையில், சில நிமிடங்களிலே முதல் ஆளாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து கோலி விலக முடிவு செய்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. ஆனால், அது எல்லாம் பொய் என்று பிசிசிஐ மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், கோலில் சற்று முன்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆனால், தொடர்ந்து இந்திய அணிக்கு என்னுடைய முழு ஒத்துழைப்பையும், சிறந்த விளையாட்டையும் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
இவர் இதை அறிவித்த சில நிமிடங்களிலே இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நிச்ச்சயமாக நீங்கள் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பீர்கள், உலகக்கோப்பை தொடருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.