2022 சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 23 நாட்கள் இந்த ராசிகாரர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டுமாம்

Horoscope
By Kishanthini Jul 14, 2022 05:37 AM GMT
Report

2022 ஜூலை 13 ஆம் திகதி ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறுகிறார் மற்றும் இந்த ராசியில் 23 நாட்கள் வரை இருந்து, பின் கடக ராசிக்கு மாற்றுவார்.

சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் 12 ராசிகளும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்று பார்ப்போம். 

மேஷம்

மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் தைரியம் அதிகரிக்கும். அதேப் போல் உங்களின் புரிதலும், பொறுமையும் அதிகரிக்கும்.

பணியிடத்தில் உங்களில் வேலை பாராட்டைப் பெறும் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும். இக்காலத்தில் பல முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. கார், நிலம், வீடு போன்ற சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு இது சாதகமான காலமாக இருக்கும். வணிக ரீதியாக சில சிக்கல்களை சந்திப்பீர்கள்.

ஆனால் பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் ஓரளவு லாபம் பெறுவார்கள். இக்காலத்தில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதேப் போல் திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அதிக லாபத்தைப் பெறுவார்கள்.

மாணவர்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திப்பார்கள். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அலர்ஜி பிரச்னையையும் சமாளிக்க வேண்டியிருக்கும்

கடகம்

கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேவைப்பட்டால் மட்டும் செலவுகளை செய்யுங்கள். நிதி பரிவர்த்தனைகளுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

இக்காலத்தில் சிலரின் பகுத்தறிவற்ற நடத்தையை எதிர்கொள்வீர்கள் மற்றும் உறவினர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். தொழில் ரீதியாக வியாபாரிகளுக்கு நல்ல நேரமாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் கடின உழைப்பு உங்களின் வருமானத்தில் புகழைக் கொண்டு வரும்.

இது உங்களின் தோல்விகளை சமன் செய்யும். வேலையில் சற்று குழப்பம் அடைவீர்கள். வியாபாரம் தொடர்பான சிறு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புக்கள் வரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலம் சாதகமாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

தொழிலில் புதிய திட்டத்தின் மூலம் வெற்றியையும், புகழையும் பெறுவீர்கள். இக்காலத்தில் உங்கள் தந்தையின் ஆதரவு உங்களின் பல விருப்பங்களை நிறைவேற்றக்கூடும். உங்கள் குடும்பம் மற்றும் துணையுடனான உங்கள் உறவு சிறப்பாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

தொழிலில் பல புதிய வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். அதோடு அதிக லாபத்தையும் பெறுவீர்கள். எந்தவொரு வேலையிலும் குடும்பத்தினரின் முழு ஆதரவு இருக்கும். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் உறவுகள் பாதிக்கப்படலாம். நிதி நீதியாக, இக்காலமானது உங்களை தவறான வழியில் பணம் சம்பாதிப்பதை நோக்கித் தள்ளும், இது பெரிய இழப்புகளுக்கு வழிவகுக்கும்.

ஆனால் தொழிலில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும். இதனால் உங்கள் ரகசிய எதிரிகளின் பொறாமை அதிகரிக்கும். உங்கள் திருமண வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு

தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். இக்காலத்தில் வேலைக்கு பதிலாக, பிறவற்றில் முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தொழில் செய்பவர்கள் நல்ல வாய்ப்புகளால் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவார்கள். உத்தியோகத்தில் நல்ல வருமான உயர்வு ஏற்பட்டு மனநிறைவை அடைவீர்கள்.

மகரம்

மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். சிறு விஷயங்களுக்காக விவாதம் செய்வதைத் தவிர்த்து, பொறுமை காக்க முயற்சி செய்யுங்கள்.

நிதி ரீதியாக, இக்காலத்தில் கடன் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். வேலையை மாற்றுவதற்கு நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இல்லை. காதல் உறவில் தவறான புரிதல்கள் ஏற்பட்டு பிரச்சனையை சந்திக்கலாம்.

கும்பம்

கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி காலம் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இல்லற வாழ்வில் அமைதியைக் கடைப்பிடிப்பதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாணவர்களுக்கு சாதகமான காலம். வாழ்க்கைத் துணையுடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். உங்கள் குழந்தைகளின் செயல்களால் உங்களின் மரியாதை அதிகரிக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

மீனம்

மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் காதவிப்பவர்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும்.

நிலம், கட்டிடம், வாகனங்கள் வாங்குவதால் ஆதாயம் கிடைக்கும். வேலை செய்பவர்கள் இந்த ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் நிச்சயம் சுப பலன்களைப் பெறுவார்கள்.

வேலை தொடர்பான பயணங்களுக்கு இது நல்ல காலம் அல்ல. எனவே அதைத் தவிர்ப்பது நல்லது.   

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US