கனேடியர்களே திணறும்போது புலம்பெயர்ந்தோர் என்ன செய்வார்கள்?: எக்கச்சக்கமாக உயர்ந்துவரும் வீட்டு வாடகை!
சமீபத்தில் வீட்டு வாடகை, விலைவாசி உயர்வு, ஊதியத்தில் பாரபட்சம் என பல்வேறு காரணங்களால் புலம்பெயர்ந்தோர் அமைதியாக கனடாவை விட்டு வெளியேறி வருவதாக ஒரு செய்தி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், கனேடிய மாகாணம் ஒன்றில், கனேடியர்களே வீட்டு வாடகை உயர்வை சமாளிக்க முடியாமல் திணறி வருவதாக மற்றொரு செய்தி வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரிட்டிஷ் கொலம்பியாவின் மையப்பகுதிக்குச் சென்றால் இலகுவான வாடகையில் வீடு கிடைக்கும் என்ற விளம்பரங்களை நம்பி விக்டோரியாவிலிருந்து Vernonக்கு குடிபெயர்ந்தார் Ashlee Jessee.
இப்போது, வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் Turning Points Collaborative என்னும் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் குறைந்த வாடகை வாடகை அறைகளில் ஒன்றில் தன் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் தங்கியிருக்கிறார் அவர்!
இப்படி வீடுகளை விட்டு விட்டு வாடகை அறைகளில் தங்கியிருப்பது Jessee குடும்பம் மட்டுமல்ல, சுமார் 14 குடும்பங்கள் இதேபோல Turning Points Collaborativeஆல் நடத்தப்படும் வாடகை அறைகளில் தங்கியிருக்கிறார்களாம்.
நான் தனியாக இருந்தபோதும் இந்த வீட்டு வாடகை பிரச்சினையை எதிர்கொண்டு வந்தது உண்மைதான். ஆனால், இப்போது என் பிள்ளைகளுடன் அதே நிலையை எதிர்கொள்வதால், அவர்களைக் குறித்து எனக்கு மிகுந்த அச்சம் உருவாகிவிட்டது என்கிறார் Jessee.
Turning Points Collaborative தொண்டு நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான Randene Wejr கூறும்போது, Jesseeயின் குடும்பத்தைப் போலவே தங்களிடம் உதவி கோரி தினமும் நான்கு முதல் ஆறு தொலைபேசி அழைப்புகள் வருவதாக தெரிவிக்கிறார்.
ஆக, கனேடியர்களே இப்படி வீட்டு வாடகை கொடுக்கத் தடுமாறுவார்களானால், பிழைப்புத் தேடி கனடாவுக்கு வரும் புலம்பெயர்வோரின் நிலை என்ன என்ற கேள்விதான் எழுந்து மனதை வாட்டுகிறது...