பிரித்தானிய சுகாதார செயலாளர் கூறிய "மிகவும் நல்ல செய்தி", தடுப்பூசி குறித்து வெளியான ஆச்சரியமான ஆய்வு முடிவுகள்!
பிரித்தானியாவில் செலுத்தப்படும் Pfizer மற்றும் Oxford தடுப்பூசிகள் குறித்து வெளியான ஆச்சரியமான ஆய்வறிக்கையை, இது பிரித்தானியர்களுக்கு மிகுந்த நல்ல செய்தி என பிரித்தானிய சுகாதார செயலாளர் Matt Hancock பாராட்டியுள்ளார்.
பிரித்தானியாவில் முதியவர்களிடையே நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஃபைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் கடுமையான நோய்களைக் குறைப்பதில் "மிகவும் பயனுள்ளதாக" இருப்பதாவும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரில் எண்ணிக்கை 80 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அங்கீகரிப்பதற்கு மறுப்பு தெரிவித்திருந்த பிரான்சும் ஜேர்மனியும், தற்போது தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள கருதும் இந்த நிலையில், இந்த ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது.
Public Health England கடந்த ஜனவரி முதல் தரவுகளை சேகரித்து நிஜ உலக ஆய்வின்படி இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.
முதல் டோஸ் வழங்கப்பட்டதிலிருந்து அடுத்த 35 நாட்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஒருவர் பெறும் பாதுகாப்பு, ஃபைசரைக் காட்டிலும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சற்று சிறந்த பலனை அளிப்பதாக முடிவுகள் கூறுகின்றன.
80 வயதுகளில் இருப்பவர்களுக்கு, இரண்டு தடுப்பூசிகளும் முதல் டோஸிலேயே 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பயனளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரண்டு தடுப்பூசிகளும் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதானவர்களிடையே COVID-19 நோய்த்தொற்றுகளைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார செயலாளர் Matt Hancock இந்த புதிய ஆய்வை பிரித்தானியர்களுக்கு "மிகவும் நல்ல செய்தி" என்று பாராட்டினார்.