பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால்... சுவிஸ் நிபுணர் விடுக்கும் எச்சரிக்கை
நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டால், சிறார்களே அதிகமாக பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு என சுவிஸ் தொற்று நோய் நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் பரவல் வேகமெடுத்துவரும் நிலையில், சிறார்கள் அதிகமாக பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தை சுவிட்சர்லாந்தின் தொற்று நோய் நிபுணர் Julia Bielicki வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகளில் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனை நாடும் நிலை அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் அவ்வாறான ஒரு நிலை இதுவரையில் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், சூழ்நிலைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா அல்லது பிரித்தானியா இடையே ஒப்பிடுவது என்பது கடினம் என குறிப்பிட்டுள்ள அவர், இந்த மூன்று நாடுகளிலும் உள்ள சுகாதார அமைப்புகள் பெரிதும் வேறுபடுகின்றன என்றார்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் உள்ள மருத்துவ கட்டமைப்பு காரணமாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மிகவும் தாமதமாகவும் மோசமான நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்றார்.
சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை, இருப்பினும் ஒப்பீட்டளவில் மிக குறைவான எண்ணிக்கையிலான சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்றார்.
மேலும், மருத்துவக் கண்ணோட்டத்தில், ஓமிக்ரான் மிகவும் ஆபத்தானது அல்ல, ஆனால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, அவர்கள் குறைந்த தடுப்பூசி விகிதத்தைக் கொண்டிருப்பதால், மறைமுகமாக, பள்ளி, கிளப் செயல்பாடுகள் மற்றும் நண்பர்களுடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.