வெட்ட வெட்ட முடி நீளமாக வளர உதவும் எண்ணெய்: எப்படி பயன்படுத்துவது?
முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசை.
அந்தவகையில், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் வெட்டிவேர் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
- வெட்டிவேர் எண்ணெய்- 6 துளிகள்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் வெட்டிவேர் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் இந்த எண்ணெயை உச்சந்தலையில் நன்கு தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யவும்.
அடுத்து இதை ஒரு மணி நேரம் அப்படி விடலாம் அல்லது ஒரு இரவு முழுக்க அப்படியே நன்கு ஊறவிடவும்.
இதனைத்தொடர்ந்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
இந்த எண்ணெய் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உச்சந்தலையில் உள்ள பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது.
இதனை தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தி வர முடி உதிர்தலை நிறுத்தி கூந்தல் நீளமாக வளர உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |