தீபாவளிக்கு 100 ரூபாய்க்கு 10 வகை காய்கறி தொகுப்பு இன்று முதல் விற்பனை- தமிழக அரசு
Vetri Special Vegetable Kit Scheme launched in Tamil Nadu- தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு ரூ.100க்கு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் வகையில் தமிழக அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவுப் பண்டகசாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்களில் இந்தத் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், சென்னையில் 4 நடமாடும் காய்கறி கடைகள் மூலமும் விற்பனை நடைபெறுகிறது.
இந்தத் தொகுப்பில் பெரிய வெங்காயம் 500 கிராம், தக்காளி 500 கிராம், கத்தரிக்காய் 250 கிராம், உருளைக்கிழங்கு 250 கிராம், கேரட் 200 கிராம், பீன்ஸ் 200 கிராம், பச்சை மிளகாய் 100 கிராம், எலுமிச்சை 100 கிராம், இஞ்சி 50 கிராம், தேங்காய் 400 முதல் 450 கிராம் வரை இடம்பெற்றுள்ளன.

ஒரு காய்கறித் தொகுப்பு ரூ.100க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புக் காய்கறி தொகுப்பு இன்று முதல் நவம்பர் 7ஆம் திகதி வரை விற்பனை செய்யப்பட உள்ளது.