விஜய் விருது விழாவில் வழங்கிய வெற்றிலை பாயசம்: எப்படி செய்வது?
பண்டிகை காலங்களில் இருந்தே வீட்டில் விசேஷங்கள் என்றால் உடனே நாம் செய்க்கூடிய ஒரு இனிப்பு வகை தான் இந்த பாயசம்.
தற்போது நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பரிமாறப்பட்ட வெற்றிலை பாயாசம்தான் ஊரெங்கும் பேச்சாக இருக்கிறது.
அந்தவகையில், மருத்துவகுணங்கள் நிறைந்த சுவையான வெற்றிலை பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாதாம் பிசின்- 1g
- பாதாம்
- முந்திரி
- பிஸ்தா
- பால்-100ml
- வெற்றிலை- 2
- ஏலக்காய் பொடி- - சிறிதளவு
- குங்குமப்பூ- சிறிதளவு
- சர்க்கரை- தேவையான அளவு
செய்முறை
முதலில் பாதாம் பிசினை ஊற வைத்துக் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு பாதாம், முந்திரி, பிஸ்தாவை ஊறவைத்தது அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து பாலை சுண்ட காய்ச்சிக் கொண்டு மலாய் போல் காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அந்த பாலில் பாதம் பிசின், அரைத்த விழுது, சர்க்கரை சேர்த்து நன்கு கிண்டி விடவும்.
இதன்பின் வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து அதில் ஊற்றவும்.
பின்னர் இதில் ஏலக்காய் பொடி, குங்குமம்பூ தூவிவிட வேண்டும்.
இறுதியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தாவை சேர்த்து ஐஸ் போட்டு கொடுத்தால் வெற்றிலை பாயாசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |