பிரித்தானியாவில் செவிலியருக்கு வயாக்ரா கொடுத்து உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்!
பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 28 நாட்களாக கோமாவில் இருந்த செவிலியரை மருத்துவர்கள் வயாக்ரா மருந்து கொடுத்து காப்பாற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ விஞ்ஞானம் கவர்ச்சிகரமானது, அது சில சமயங்களில் பல ஆச்சரியங்களை நிகழ்த்தக்கூடியது. அந்த வகையில் பிரித்தானியாவில் நடந்த ஆச்சரியமான சம்பவத்தில் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
கோவிட்-19 கோமாவில் 28 நாட்கள் கழித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு செவிலியருக்கு, பரிசோதனை சிகிச்சையின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் வயாகராவை கொடுத்த நிலையில், அவர் அதிசயமான முறையில் குணமடைந்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள லிங்கன்ஷையரைச் சேர்ந்த 37 வயதான மோனிகா அல்மெய்டா (Monica Almeida), நவம்பர் 9-ஆம் தேதி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
Photo: Monica Almeida/The Lincolnite
அவர் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்த நிலையிலும், அவர் ருசி மற்றும் வாசனையை இழந்து, கடுமையான இருமலின்போது சளியுடன் இரத்தம் கலந்துவந்ததால் அவதிக்கு உள்ளானார்.
பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவரது உடல்நிலை மோசமடைந்ததது. ஒரு வாரம் கழித்து, அவர் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட நிலையில், நவம்பர் 16 அன்று தூண்டப்பட்ட மருத்துவ கோமாவில் (induced coma) வைக்கப்பட்டார்.
பின்னர் அவர் கோமாவில் இருந்து கண்விழித்தபோது, அவர் ஒப்புக்கொண்ட பரிசோதனைச் சிகிச்சைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அவருக்கு அதிக அளவு வயாகரா கொடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இரத்த தமனிகளின் சுவர்களைத் தளர்த்துவதன் மூலம், விறைப்புச் செயலிழப்புக்கான மருந்தான வயாகரா உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் அதிக இரத்தத்தைச் சுற்ற அனுமதிக்கிறது.
அவர் டிசம்பர் 14 அன்று கோமாவில் இருந்து எழுந்தார், மேலும் வீட்டிற்குத் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
மோனிகா அல்மெய்டா ஒரு புதிய மருத்துவ சோதனை முயற்சியின் பலனாக உயிர்பிழைத்தார்.
நைட்ரிக் ஆக்சைடைப் போல ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க வயாக்ராவை பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய சோதனைகள் நடத்தப்படுகின்றன.
Upcoming Photos credit: Monica Almeida/The Lincolnite



