ஜேர்மனிக்கு எதிரான வெற்றி..20 ஆண்டுகளில் முதல் முறையாக ரஷ்யா எடுத்துள்ள முடிவு
இரண்டாம் உலகப்போரின் வெற்றி அணிவகுப்பில், ரஷ்யா தனது இராணுவத் தளவாடங்களை காட்சிப்படுத்தாது என்று தெரிவித்துள்ளது.
81வது ஆண்டு
இரண்டாம் உலகப்போரில் நாசி ஜேர்மனிக்கு எதிரான சோவியத் ஒன்றியம் பெற்ற வெற்றியின் 81வது ஆண்டைக் குறிக்கும் வகையில் அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் இராணுவ வலிமையின் பிரம்மாண்டமான வெளிப்பாடாக இந்த நிகழ்வு கொண்டாடப்படும். அந்த வகையில் மே 9ஆம் திகதி மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெற உள்ளது.
ஆனால் இந்த முறை வெற்றி அணிவகுப்பில் ரஷ்யா தனது இராணுவத் தளவாடங்களை காட்சிப்படுத்தாது என்று, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
20 ஆண்டுகளில் முதல்முறை
டெலிகிராம் வாயிலாக அமைச்சகம் கூறுகையில், "தற்போதைய களச் சூழலின் காரணமாக பல இராணுவ பாடசாலைகள், Cadet படைகள் மற்றும் இராணுவ தளவாடங்களின் அணிவகுப்புப் பிரிவு ஆகியவை இந்த ஆண்டின் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்காது" என தெரிவித்தது.
மாஸ்கோவின் வெற்றி நாள் அணிவகுப்பு, ஏறக்குறைய 20 ஆண்டுகளில் முதல்முறையாக இராணுவ வாகனங்கள் இன்றி நடைபெறுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |