கனடா எல்லையில் பனியில் உறைந்து பலியான குடும்பம்... கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த உறவினர்கள்

Canada Border
By Balamanuvelan Feb 08, 2022 07:10 AM GMT
Report

கனடா அமெரிக்க எல்லையில், பனியில் உறைந்து பலியான இந்தியக் குடும்பத்தின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்கா செல்லும் ஆசையில், கனடாவிலிருந்து நடந்தே அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33) பிள்ளைகள் விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் சென்ற மாதம் உயிரற்ற உடல்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அதிர்வலைகளை உருவாக்கியது.

இந்நிலையில், ஜகதீஷ் குடும்பத்தின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை அமைதியாக வின்னிபெக்கில் நடைபெற்றுள்ளது.

இந்தியாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் வந்த 11 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வின்னிபெக்கில் வாழும் மூன்று பேர் அந்த இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுள்ளனர்.

கனடா எல்லையில் பனியில் உறைந்து பலியான குடும்பம்... கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த உறவினர்கள் | Victims Frozen In Snow On Canada Border

மேலும், இறுதிச்சடங்கை மற்ற உறவினர்களும் நண்பர்களும் பார்க்கும் வகையில் நேரலையில் ஒளிபரப்பும் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை நான் பங்கேற்றதிலேயே அதிக சோகமான இறுதிச்சடங்கு இதுதான் என்கிறார் வின்னிபெக்கில் வாழும் Bhadresh Bhatt.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு, இப்படிப்பட்ட ஒரு சோக சூழலில் இறுதிச்சடங்கு நடத்தப்படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் Bhadresh Bhatt.

கனடா எல்லையில் பனியில் உறைந்து பலியான குடும்பம்... கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த உறவினர்கள் | Victims Frozen In Snow On Canada Border

இறுதிச்சடங்கைத் தொடர்ந்து, இந்தியாவில் ஜகதீஷ் குடும்பத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமானோர் திங்கட்கிழமை கூடி ஜகதீஷ் குடும்பத்தினரை நினைவுகூரும் வகையில் ஞாபகார்த்த நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

இதற்கிடையில், ஜகதீஷ் குடும்பத்தினரை அமெரிக்காவுக்கு அனுப்பியதின் பின்னணியில் உள்ளது யார் என்பதைத் தெரிவிக்க அவரது குடும்பத்தினர் தயக்கம் காட்டி வருகின்றனர். அது தொடர்பான விசாரணை இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US