அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகளுடன் சேர்ந்து கொல்லப்பட்ட 2 இளம்வயது ஆசிரியைகள்! வெளியான புகைப்படங்கள்
அமெரிக்காவின் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
டெக்ஸாஸில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 18 வயது இளைஞன் சால்வடார் ராமோஸ் என்பவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 மாணவ, மாணவிகள் 2 ஆசிரியைகள் என மொத்தம் 21 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதாரியும் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டான். இந்நிலையில் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தோரின் புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் வெளியாகியுள்ளது.
Amerie Jo Garza (10)
Amerie நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு Amerie இருக்கும் இடத்தைப் பற்றிய செய்திக்காக அவரின் தந்தை பல மணிநேரம் காத்திருந்தார், இறுதியில் கொல்லப்பட்ட 19 மாணவர்களில் அவரும் ஒருவர் என தெரியவந்துள்ளது.
Garza family
Xavier Lopez (10)
செவ்வாயன்று கொல்லப்பட்ட 19 பேரில் ஒருவராக குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்ட முதல் மாணவர் சேவியர் லோபஸ் ஆவார். நான்காம் வகுப்பு படித்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். சிறுவன் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஒரு விருது வழங்கும் விழாவின் போது தாயாருடன் இருந்தான். ஆனால் அப்போது அவன் தாயாருக்கு தெரிந்திருக்கவில்லை இது தான் மகனை கடைசியாக உயிருடன் பார்க்கும் தருணம் என்று!
Lopez family
Eva Mireles (ஆசிரியை)
பொலிஸ் அதிகாரியின் மனைவியான Eva Mireles துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். சிறந்த ஆசிரியை என பெயர் வாங்கிய இவருக்கு ஒரு குழந்தை உள்ளது.
Lydia Martinez Delgado
Irma Garcia (ஆசிரியை)
துப்பாக்கிச்சூடு நடந்த பள்ளியில் பணிபுரிந்த மற்றொரு ஆசிரியை Irma Garcia ஆவார். இவரும் தாக்குதல்தாரி சால்வடாரால் கொல்லப்பட்டுள்ளார்.
BNO News
Nevaeh Brav (மாணவி)
Nevaeh Brav மாணவியும் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.
BNO News