ஹொட்டல் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிக்க பிரித்தானிய பெண் செய்த காரியத்தால் நேர்ந்த கதி! கமெராவில் சிக்கிய காட்சி
அவுஸ்திரேலியாவில் ஹொட்டல் தனிமைப்படுத்தலில் இருந்த பிரித்தானியாவைச் சேர்ந்த பெண், ஜன்னல் வழியாக எகிறி குதித்து தப்ப முயன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
38 வயதான பிரித்தானியா பெண், Tasmania மாநிலத்தின் வடக்கில் Launceston நகரில் உள்ள Peppers Seaport ஹொட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை உடமைகளுடன் ஜன்னல் வழியாக எகிறி குதித்து ஹோட்டலின் முதல் மாடியிலிருந்து கீழே இறங்கி தப்ப முயன்றுள்ளார்.
சம்பவத்தை உறுதி செய்த Tasmania பொலிசார், அவசரநிலை நிர்வாக ஊழியரின் உத்தரவுக்கு கீழ்ப்படியத் தவறியதாக பெண் மீது குற்றம் சாட்டப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்த கைது செய்யப்பட்ட பெண், செவ்வாய்க்கிழமை Launceston நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பின்னர், பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். மார்ச் 30ம் திகதி Launceston நீதிமன்றத்தில் அவர் மீண்டும் ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tasmania மாநிலத்தில் ஐந்து நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் பிரித்தானியர்கள் மாநிலத்திற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.