உக்ரைன் ஜனாதிபதி மோசடி செய்துவருவதாக பகிரப்படும் வீடியோ: பிரான்ஸ் ஊடகம் விளக்கம்
உக்ரைன் ஜனாதிபதி, உக்ரைன் போருக்காக வழங்கப்படும் நிதியை தவறாகப் பயன்படுத்துவதாக பிரான்ஸ் ஊடகம் ஒன்று வெளியிட்டதுபோன்றதொரு செய்தி, இணையத்தில் பகிரப்பட்டுவருகிறது.
உக்ரைன் ஜனாதிபதி குறித்து தவறாக குற்றச்சாட்டு
உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் போருக்காக வழங்கப்படும் நிதியைப் பயன்படுத்தி, தனக்கு ஆடம்பரப் படகுகள் வாங்குவதாக, பிரான்ஸ் ஊடகமான France 24 தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் பரவிவருகிறது.
ஊடகவியலாளர் ஒருவர், அந்த செய்தி போலியானது என்பதை நிரூபிப்பதற்காக வெளியிட்ட வீடியோவையே, சிலர் எடிட் செய்து, அவர் உக்ரைன் ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டை உறுதி செய்வதுபோல் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த வீடியோ உண்மையானதல்ல, அது, தவறான செய்தியைப் பரப்பும் நோக்கில், யாரோ எடிட் செய்து வெளியிட்ட போலி வீடியோ என, சம்பந்தப்பட்ட ஊடகவியளாளர்கள் தற்போது மீண்டும் ஒரு வீடியோவில் விளக்கமளித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |