21 வயது இளம்பெண்ணின் சித்தரிக்கப்பட்ட நிர்வாண வீடியோ Fecebook -ல் பதிவேற்றம்
இந்திய மாநிலம் குஜராத்தில் 21 வயது இளம்பெண்ணின் சித்தரிக்கப்பட்ட நிர்வாண வீடியோ பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் புகார்
குஜராத் மாநிம், சூரத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் பாண்டேசரா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அந்த புகாரில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஷிவ்குமார் மவுரியா என்ற இளைஞர் தன்னுடைய சித்தரிக்கப்பட்ட நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.
மேலும், நிர்வாணமாக வீடியோ காட்டாவிட்டால் தனது தந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளதாக புகாரில் கூறியுள்ளார்.
பொலிசார் விசாரணை
இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், பேஸ்புக்கில் மவுரியா வீட்டின் அருகே வசிக்கும் இளம்பெண் ஒருவர் நிறுவனத்தில் வேலைபுரிவது தெரியவந்தது.
கடந்த ஆண்டு முதல் மவுரியா அந்த இளம்பெண்ணுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இருவரும் தங்கள் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு அடிக்கடி போன் செய்தும், வாட்ஸ் அப்பிலும் பேசியுள்ளனர்.
அப்போது, தனது ஆசைக்கு இணங்குமாறு மவுரியா அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். ஆனால், இதனை இளம்பெண் மறுத்துள்ளார். பின்பு, அந்த இளம்பெண்ணின் பெயரில் மவுரியா பேஸ்புக் கணக்கை தொடங்கி அதில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களை அகற்ற வேண்டும் என்றால், உடல் முழுவதையும் நிர்வாணமாக வீடியோவில் காட்ட வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
இதன் மூலம், சித்தரிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததும், இளம்பெண் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று மவுரியா தாக்கியதும் தெரியவந்துள்ளது.
மேலும், மவுரியா மீது வழக்குப்பதிவு செய்து பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |