மண் பானையால் நேர்ந்த விபரீதம்... வைரலாகும் வீடியோ!
சமைத்துக்கொண்டிருக்கும் வேளையில் மண்பானையானது வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபரீதம் குறித்து ஒரு வீடியோவானது வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
வைரலாகும் வீடியோ
பொதுவாகவே சமையல் என்பது ஒரு கடினமான விடயம். பண்டைய காலத்தில் எல்லாம் மண் பானைகளை வைத்து சமையல் செய்து வந்தனர்.
ஆனால் தற்போது அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்தி வருகின்றார்கள்.
இது எந்தளவிற்கு உடலிற்கு ஏற்ற உலோகம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதை தான் பெரும்பாலும் பயன்படுத்தி வருவார்கள்.
தற்போதைய சமூகத்தினர் மண்பானையில் சமையல் செய்து சாப்பிடலாம் என்று அதை அடுப்பில் வைத்து சமைத்து வருகின்றனர்.
அந்தவகையில் எரிவாயு அடுப்பில் ஒரு களிமண் பானையில் ஒரு டீஸ்பூன் நெய், சீரகம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கியுள்ளனர். தீ அதிகமாக இருந்ததால், மண் பானை தீப்பிடித்து வெடித்து சிதறியுள்ளது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |