தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ.., அடுத்த சர்ச்சையில் யூடியூபர் இர்ஃபான்
தனது மனைவியின் பிரசவத்தின் போது தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை சமூக வலைதளங்களில் யூடியூபர் இர்ஃபான் பகிர்ந்ததால் எதிர்ப்புகள் வந்துள்ளது.
அடுத்த சர்ச்சை
பிரபல யூடியூபர் இர்ஃபான், 'இர்பான் வியூஸ்' என்னும் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில், உணவகங்களுக்கு சென்று உணவை ரிவியூ செய்கின்ற வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து சமையல் செய்து வீடியோக்களை பதிவேற்றுவார்.
சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை துபாயில் ஸ்கேன் எடுத்து அறிவித்தார்.
பாலினத்தை அறிவிப்பது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய புகார்கள் வந்தது. ஆனால், அவர் மன்னிப்பு கூறியதால் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த செயல் தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என்று கூறி மருத்துவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |