இரண்டாவது கணவருடன் சேர்ந்து மஹூவா மொய்த்ரா நடனமாடும் வீடியோ வைரல்
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ர தனது கணவருடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோ வைரல்
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா(50) தனது கணவர் லார்ஸ் பிரார்சன் என்பவரை விவாகரத்து செய்திருந்தார்.
இவர், தனது நாடாளுமன்ற இ-மெயிலில், தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தினி என்பவரை கேள்வி எழுப்ப அனுமதித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் அம்பலமானதால் மஹூவா மொய்த்ரா தனது எம்பி பதவியை இழந்தார். பின்னர், அடுத்த நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திரிணமூல் சார்பில் மீண்டும் போட்டியிட்டு எம்பியானார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், பிஜு ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பினாகி மிஸ்ராவை (65) மஹூவா மொய்த்ரா ஜெர்மனியில் மணந்தார்.
இந்நிலையில், மஹுவா மொய்த்ராவும் பினாகி மிஸ்ராவும் "ராத் கே ஹம்சஃபர்" என்ற பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
💍 TMC MP Mahua Moitra ties the knot with ex-BJD MP Pinaki Misra in Berlin! 🇩🇪
— Krishna Gopal Sharma (@KrishnaG_Sharma) June 8, 2025
A graceful, low-key ceremony with family & friends — video of their dance to “Raat Ke Humsafar” melts the internet. ❤️🕊️
👩⚖️ Mahua (50) – firebrand TMC leader
👨⚖️ Pinaki (65) – senior advocate & 4-time… pic.twitter.com/j6o0wniqR6
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |