வகுப்பறையில் தலையை விரித்து போட்டு எண்ணெய் தேய்க்கும் ஆசிரியையின் அநாகரிக வீடியோ
வகுப்பறையில் பாடலை ஒலிக்க விட்டு தலையில் எண்ணெய் தேய்க்கும் ஆசிரியையின் அநாகரிக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியரின் செயல்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், புலந்த்சர் அருகே குா்ஜா பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பள்ளியில் இருக்கும் ஆசிரியையின் அநாகரிக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், வகுப்பறையில் உள்ள ஆசிரியை பாடம் நடத்துவதை கவனிக்க மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஆனால், அந்த ஆசிரியை ஸ்பீக்கரில் பாடலை சத்தமாக ஒலிக்க விடுகிறார். பின்னர், தலையை விரித்து போட்டு எண்ணெய் தேய்க்கிறார். மேலும், ஒரு மாணவியை அழைத்து தனது கைப்பையில் உள்ள செல்போன் சார்ஜரை எடுத்து தருமாறு கட்டளையிடுகிறார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனிடையே, வகுப்பில் அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியை தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை என தெரிய வந்துள்ளது.
தற்போது இந்த ஆசிரியையை பணி இடைநீக்கம் செய்து மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
वाह क्या ठाठ है यार
— Rajneesh kumar (@JanAdarshBhara1) July 20, 2025
प्रिंसिपल मैडम तेल से चंपी कर रही हैं 😎
लाउडस्पीकर में क्लासिकल सांग का आनंद लेते हुए। सिंगार दानी से तेल निकाल कर सर में डाल-डाल कर मानसिक टेंशन दूर कर रही हैं।
👉🏾 सहायक अध्यापक द्वारा वीडियो बनाये जाने पर छात्र छात्राएं मुस्कुराते हुए इशारा कर रहे हैं,… pic.twitter.com/hgVVQzYjg4
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |