உலகை உலுக்கிய ஜேர்மன் இளம்பெண்ணின் வீடியோ: தந்தை வெளியிட்டுள்ள செய்தி
ஹமாஸ் ஆயுதக்குழுவினர், முழுமையாக உடை தரிக்காத நிலையில் காணப்பட்ட ஜேர்மன் இளம்பெண் ஒருவரின் உடலை வாகனம் ஒன்றில் ஏற்றி வலம் வந்த வீடியோ ஒன்று உலகையே உலுக்கிய சம்பவத்தை யாராலும் எளிதில் மறக்கமுடியாது.
இந்நிலையில், அந்த இளம்பெண்ணின் தந்தை தன் மகள் குறித்து சில விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
பெரும் நிம்மதி...
Image: Instagram
கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நிகழ்த்திய தாக்குதலின்போது, ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் காட்டுமிராண்டித்தன தாக்குதல்களில் பலியான சிறுபிள்ளைகளில் ஒன்று, அயர்லாந்தைச் சேர்ந்த தாமஸின் (Thomas Hand) மகளான எமிலி (Emily, 8).
என் மகளுக்கு என்ன ஆனதோ என தான் கவலையில் இருந்தபோது, அவள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலில் கொல்லப்பட்டாள் என்ற செய்தி கேட்டு, நான் ஆறுதலடைந்தேன், புன்னகைக்கக் கூட செய்தேன் என்று அப்போது தாமஸ் கூறிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
Image: N12
நான் கேட்ட ஆறுதலளிக்கும் செய்தி அதுவாகத்தான் இருக்க முடியும் என்று கூறியிருந்த தாமஸ், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பெண்களை என்ன செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால், அது சாவை விட மோசமானது என்பது உங்களுக்குப் புரியும் என்று கூறியிருந்தார்.
அதாவது, தன் அழகான பெண் குழந்தை ஹமாஸ் ஆயுதக்குழுவின் கையில் சிக்கி, அவர்களால் சீரழிக்கப்படுவதைவிட, அவள் இறந்துவிட்டாள் என்று தனக்குக் கிடைத்த செய்தி தன்னை ஆறுதலடையச் செய்கிறது என்று கூறியிருந்தார் தாமஸ்.
Image: No credit
வெறும் 20 விநாடிகள்தான்...
தற்போது, ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் அரை குறை ஆடையுடன் வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட இளம்பெண்ணான ஷானி லூக் (Shani Louk, 22)இன் தந்தையும், அதே போன்றதொரு கருத்தைத்தான் தெரிவித்துள்ளார்.
Image: Getty Images
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியபோது, அதை ஏதோ விபத்து என்று எண்ணிய ஷானி, உடனே அவசர உதவியை அழைத்துள்ளார். அவர் அங்கிருந்து புறப்பட முயலும்போது, அவரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
ஹமாஸ் குழுவினரிடம் பெண்கள் சிக்கினால் அவர்கள் நிலை என்ன என்பதை அறிந்த ஷானியின் தந்தையான நிஸ்ஸிம் லூக் (Nissim Louk), நல்ல வேளை, என் மகள் வெரும் 20 விநாடிகள்தான் கஷ்டப்பட்டிருக்கிறாள் என்கிறார். அவள் ஹமாஸ் கையில் சிக்கி சித்திரவதை அனுபவிக்கவில்லை என்பது தெரியவந்தது எனக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்கிறார் அவர்.
Image: Instagram
இதற்கிடையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட ஷானியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இம்மாதம் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |