நொடிப்பொழுதில் பொலிஸாரால் காப்பாற்றப்பட்ட விமானி! வெளியான திகில் வீடியோ
அமெரிக்காவில் பழுதாகி தண்டவாளத்தில் விழுந்த விமானம் ரயில் மோதி தூக்கிவீசப்படும் சில நொடிகளுக்கு முன் அதிலிருந்த விமானியை பொலிஸார் காப்பாற்றிய திகிலூட்டும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மதியம், லாஸ் ஏஞ்சல்ஸில் சிறிய ரக விமானம் ஒன்று பழுதாகி ரயில் பாதையில் இறங்க, வேகமாக வந்த ரயில் ஒன்று அதன் மீது மோதி, அதைத் தூக்கியெறியும் அதிர்ச்சி வீடியோ சமீபத்தில் வெளியானது.
அந்த விமானம் இறங்கி தரையில் மோதிய வேகத்தில் அதன் பைலட் காயமடைந்திருக்கிறார். தகவலறிந்து வந்த பொலிசார், உடைந்த விமானத்துக்குள் சிக்கியிருந்த பைலட்டை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
வேக வேகமாக அவர்கள் அவரை வெளியேற்ற முயல, அதற்குள் ஹாரன் ஒலித்தபடி வேகமாக ரயில் வந்திருக்கிறது.
ஒரு வழியாக பைலட்டை விடுவித்த பொலிசார், காயமடைந்ததால் அவரால் நடக்க இயலாத நிலையில், அங்கிருந்து முதல் வெளியேறிவிடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அவரை தரதரவென இழுத்துக்கொண்டு வந்தனர்.
Foothill Division Officers displayed heroism and quick action by saving the life of a pilot who made an emergency landing on the railroad tracks at San Fernando Rd. and Osborne St., just before an oncoming train collided with the aircraft. pic.twitter.com/DDxtGGIIMo
— LAPD HQ (@LAPDHQ) January 10, 2022
அவர்கள் அவரை விமானத்திலிருந்து வெளியேற்றிய ஓரிரு விநாடிகளில், வேகமாக வந்த ரயில் விமானத்தின் மீது மோதி பல பாகங்களாக பிரித்து தூக்கி எறியப்பட்டது.
விமானத்தில் அந்த பைலட் மட்டுமே இருந்திருக்கிறார், வேறு யாரும் அவருடன் இல்லை. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் காப்பாற்றப்பட்ட அந்த சில நொடிகளில் Los Angeles Police Department (LAPD) பொலிஸாரின் BodyCam-ல் பதிவான அந்த பதறவைக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.