என் மகனுக்காக வாங்கிய பணத்தில் ஒரு ரூபாய் கூட கொடுக்கல! சீமானை குற்றம் சாட்டும் விக்னேஷின் தாயார்
இளைஞர்களின் உணர்வுகளையும், தியாகத்தையும் வைத்து நாம் தமிழர் கட்சி சீமான் பணம் சம்பாதிக்கிறார் என்று தீக்குளித்து இறந்த விக்னேஷின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2016 -ம் ஆண்டு காவிரி விவகாரம் தொடர்பாக தீக்குளித்து இறந்த விக்னேஷின் தாயார் செண்பக லட்சுமி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
சீமான் உதவி செய்யவில்லை
அப்போது அவர் பேசுகையில், "விக்னேஷின் நினைவு நாளை காவிரி எழுச்சி நாளாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். என்னுடைய மகனின் உயிர் தியாகத்தை வைத்து சீமான் பணம் சம்பாதிக்கிறார்.
விக்னேஷுக்கு நினைவு மண்டபம் கட்ட வெளிநாட்டில் வாங்கிய பணத்தை செலவு செய்த சீமான், அதில் ஒரு ரூபாயை கூட குடும்பத்தினருக்கு கொடுக்கவில்லை.
எங்கள் குடும்பத்திற்கு உதவி செய்தது போலவும், என்னுடைய கண் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்தது போலவும் நாம் தமிழர் கட்சியினார் பொய்யான தகவலை பரப்புகின்றனர்.
என்னுடைய சிகிச்சைக்காக சீமான் என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. நாம் தமிழர் கட்சியினர் எங்களுக்கு நகை கொடுத்து உதவியது போல கூறுகின்றனர். அவர்கள் எங்களுக்கு எந்த பயனும் செய்யவில்லை.
விக்னேஷ் மரணத்தை சீமான் வியாபாரம் ஆக்கி விட்டார். இளைஞர்களின் உணர்வுகளையும் தியாகத்தையும் வியாபாரம் ஆக்கிவிட்டார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |