விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல தோனி! CSK ரசிகர்களுக்கு செம விருந்து
கிரிக்கெட் ரசிகர்களால் தல என செல்லமாக கொண்டாடப்படும் மகேந்திர சிங் தோனி இயக்கவுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவனுக்கு பெயரை பெற்றுக் கொடுத்தது நானும் ரவுடி தான்.
இந்த படத்தில் நடித்த நயன்தாராவுடன் நிஜ வாழ்க்கையில் காதல் வொர்க் ஆக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், வெப் சீரிஸ் இயக்கி வந்த விக்னேஷ் சிவனின் அடுத்த படமான “காத்து வாக்குல ரெண்டு காதல்” விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனியை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் விக்னேஷ் சிவன்.
இதை அவரே இன்ஸ்டாவில் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர படத்தில் தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல தோனி நடிக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.