காதலை முதலில் கூறியது யார்? - மனம் திறந்து பேசிய விக்னேஷ் சிவன்
பிரபல இந்திய தமிழ் திரைப்பட இயக்குனரான விக்னேஷ் சிவன் தனது காதல் வாழ்க்கை குறித்து நடிகை நயன்தாராவின் Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படத்தின் மூலம் வெளிப்படையாக பேசியுள்ளார்.
Nayanthara: Beyond The Fairy Tale
நடிகை நயன்தாராவின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படம் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் வெளியாகியது.
இந்த ஆவணப்படம் நயன்தாராவின் திருமணம் முடிந்ததோடு வெளிவரவிருந்தது. ஆனால் இது வெளிவராமல் இருந்தமைக்கு நடிகர் தனுஷ் தான் காரணம் எனவும் நடிகை நயன்தாரா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
காதலை முதலில் கூறியது யார்?
இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டு தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில், தற்போது தான் இவர்களுடைய காதல் கதை குறித்து மனம் திறந்துள்ளனர்.
நடிகை நயன்தாராவின் Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படத்தின் மூலமே விக்னேஷ் சிவன் காதல் கதை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில், நயன்தாரா தான் தன்னை முதலில் காதலித்ததாக விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் மேடம் என்றே அழைத்து வந்தேன். அவரின் பெயரை கூறி அழைப்பது கூட எனக்கு சங்கடமாக இருந்தது.
நானும் நயனும் காதலிப்பது தெரிந்த பலரும், "உளுந்தூர்பேட்டை நாய்க்கு நாகூர் பிரியாணியா?" என கேலியும் கிண்டலுமாக பேசி வந்தனர்.
அதாவது என்னை போன்ற சாதாரண மனிதருக்கு சூப்பர் ஸ்டாரான நயன்தாரா கிடைப்பதா? என்று முதலில் எங்களுடைய காதலை விமர்த்து வந்தனர்.
ஏன், உளுந்தூர்பேட்டை நாய்க்கு நாகூர் பிரியாணி கிடைக்கக்கூடாதா? என்னை போன்ற ஒருவனை நயன்தாரா காதலித்தது இப்போது வரை எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது.
நயன்தாரா போன்ற ஒருவர் என் வாழ்க்கையில் வருவார் என நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை.
ஆனால் நயன்தாரா வந்த பிறகு என் வாழ்க்கையில் அவ்வளவு நல்ல விஷயங்கள் நடந்தன. அந்த தருணங்களில், சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து, தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த ரஜினி சாரை தான் மனதுக்குள் நினைத்து கொள்வேன்
12 ஆம் வகுப்பு படிக்கும் போதே எங்கள் தந்தையை இழந்தோம். இதனால் தாயையும் சகோதரியையும் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை இருந்தது.
இப்படியான சூழலில் சினிமாவுக்கு செல்ல வேண்டியது எனது லட்சியமாக இருந்தது. என்னை ஊக்கப்படுத்தி சினிமாவுக்குள் வரவைத்து என் அம்மா தான்.
அம்மா, அப்பா இருவரும் போலீஸ். அவர்களின் அனுபவத்தை வைத்துதான் 'நானும் ரவுடிதான்' படத்தை எடுத்தேன்" என மனம் திறந்து விக்னேஷ் சிவன் பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |