என் தங்கமே! நயன்தாரா கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்னர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு
நயன்தாரா கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்னர் விக்னேஷ் சிவன் சமூகவலைதளங்களில் போட்ட பதிவு வைரலாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
திருமணத்திற்கு முன்னர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் போட்ட பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், இன்றைக்கு ஜூன் 9. இந்த நாள் நயன் உடையது.
கடவுளுக்கு, பிரபஞ்சத்துக்கு, என் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு மனிதர்களுக்கும் நன்றி. அனைத்து நல்ல உள்ளங்களும் நல்ல தருணங்களும் எதிர்பாராது நடந்த நல்ல நிகழ்வுகளும் ஆசிர்வாதமும் ஒவ்வொரு படப்பிடிப்பு நாளும் ஒவ்வொரு வேண்டுதலும் என் வாழ்வை அழகாக மாற்றியுள்ளன.
இவற்றுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது இவை எல்லாவற்றையும் என் வாழ்வின் காதலுக்கு அர்ப்பணிக்கிறேன். என் தங்கமே! இன்னும் சில மணிநேரங்களில் திருமண நடைமேடையில் உன்னைக் காண ஆவலோடு இருக்கிறேன்.
நல்லவை நிகழக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். அதிகாரபூர்வமாக நம் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.