நயன்தாரா திருமணம் இந்துமுறைப்படி தானாம்! உறுதிசெய்த விக்னேஷ் சிவன்
ஜூன் 9ஆம் திகதி தங்கள் திருமணம் இந்து முறைப்படி தான் நடைபெறும் என நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் வரும் ஜூன் 9ஆம் திகதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன், திருமணம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசும்போது, 'இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல பரிமாணங்களின்போது தொடர்ந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய அடுத்தகட்ட வாழ்க்கை நிகழ்வை நோக்கி நகர்கிறேன்.
வரும் ஜூன் 9ஆம் திகதி மாமல்லபுரத்தில் நயன்தாராவுடன் திருமணம் செய்ய உள்ளேன். திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், சில சிக்கல்கள் காரணமாக இடம் மாற்றப்பட்டுள்ளது.
அதனால் மாமல்லபுரத்தில் சில பேர் முன்னிலையில் எங்கள் திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் முடிந்த பின்னர் ஜூன் 11ஆம் திகதி உங்களை (செய்தியாளர்கள்) நானும், நயன்தாராவும் இணைந்து சந்திக்க இருக்கிறோம். எங்கள் திருமணம் இந்து முறைப்படி தான் நடைபெறும்' என தெரிவித்துள்ளார்.